search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போல்டன் தாக்குதல்"

    போர் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா கூறும் அனைத்து தகவல்களும் பொய் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.



    ஐக்கிய அரபு எமிரேட்களின் கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கப்பல்கள் மீது சில தினங்களுக்கு முன் அதிரடி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் தான் காரணம் என்ற வாக்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குற்றஞ்சாட்டினர்.

    இவரது அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் தாக்குதல்களுக்கு ஈரான் தான் முழு காரணம் என்ற வாக்கில் அமெரிக்கா முழுக்க செய்திகள் பரவின. 



    போல்டன் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு தாக்குதல் தொடர்பாக எவ்வித ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  

    இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா இதுபோன்ற நகைச்சுவை மிக்க வதந்திகளை பரப்புவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என ஈரான் வெளியுறவு மந்திரி அபாஸ் மௌசாவி தெரிவித்தார். 

    ஈரானின் அமைதி, கவனமான செயல்பாடுகள் பதற்றத்தை தூண்ட முற்படும் போல்டனின் திட்டத்தை பலிக்க விடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
    ×